டிச. 24
திருப்பூர் மாநகர தினசரி மார்க்கெட் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கம் பதிவு எண்: 124/2024
தலைவர் தம்பி.ப.குமாரசாமி.செயலாளர் மார்க்கெட் பா.சிவக்குமார் .பொருளாளர் பி.ரவிக்கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது.
அதில் கூறி இருப்பது என்னவென்றால்
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 3ல் முன்னாள் பழைய பேருந்து நிலையம் ) தற்போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் சீர்மிகு தீட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கடைகளுக்கும் வாடகை நிர்ணயம் செய்து ஒட்டுமொத்தமாக எங்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கித்தர வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் வியாபாரிகளுக்கு ஒதுக்கித்தர தாமதம் செய்யாமல் உடனடியாக ஒதுக்கித்தர வேண்டும்.
இப்போது உள்ள கட்டிடம் ஒருநாள் வைத்து வியாபாரம் செய்யும் அளவிற்கு காற்றோட்ட வசதி இல்லாமல, கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கீழ்த்தளங்களில் உள்ள அனைத்து கடைகளையும் அழுகும் பொருட்களாக காய்கறி கடைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யவும்.மாநகராட்சி நிர்வாகத்தால் தற்போது ஒதுக்கியுள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில் மொத்தம் 400 கடைகளுக்கு மேல் இருந்தாலும், 200 வியாபாரிகளுக்கும் குறைவாகவே வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், அனைத்து கடைகளுக்கும் மொத்தமாக வாடகை செலுத்தி வருகிறோம். ஆகவே, தாங்கள் இப்பிரச்சனையில் தனிகவனம் செலுத்தி வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்காவது வாடகை தள்ளுபடி செய்து தர வேண்டும். காரணம். அருகில் உள்ள பல்லடம் நகராட்சியிலும், நீலகிரி நகராட்சி நிர்வாகத்தாலும், கொரோனோ காலத்தை காரணம் காட்டி வாடகை தள்ளுபடி செய்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காத்துள்ளார்கள்.
தற்போது தரைதளத்தில் கட்டியுள்ள 178 கடைகளில் 14 கடைகளை சுமார் 50 நபர்களுக்கு கொடுக்கும் கடைகளை 17நபர்களுக்கு மட்டும் கொடுக்கும் அளவிற்க்கு பெரிதாகவும் ரோடு முகப்பிலும் அமைத்துள்ளார்கள். இதன் காரணத்தினால் உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 164 கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அந்த கடைகளை உட்புறமாக மாற்றித்தரவேண்டும் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து கடைகளும் தனி தனி மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்
இதில்
சங்க சட்ட ஆலோசகர் உதயகுமார், துணை தலைவர் வெள்ளியங்கிரி, தேங்காய் கடை ராஜா, காய்கடை ராணி,வாழைக்காய் கடை அரு க்கானி, நுகர்போர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், ரபீக் உடனிருந்தனர்.