போகலூர், மார்ச் 7-
அ.தி.மு.க.,வில் தென்மாவட்டத்திற்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்பதில் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியான முடிவில் உள்ள நிலையில் யாருக்க அடிக்க போகிறது ஜாக்பாட் என்ற எதிர்பார்ப்பில் தென்மாவட்ட அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசிகள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இதில், தென்மாவட்டங்களில் அதிக ஓட்டுகள் உடைய முக்குலத்தோருக்கு வழங்க வேண்டும் அதிலும் அகமுடையார் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக தேவர் பிறந்த மண்ணான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்குவது தேவருக்கே வழங்கி பெருமை சேர்த்தது போல் இருக்கும் என்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தை சேரந்த அ.தி.மு.க., அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது என்ற பேச்சு தற்போது அ.தி.மு.க.,வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., எம்.பி.,க்கள் விசல்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யா சபா எம்.பி., பதவி ஜூலை 24 ல் நிறைவு பெறுகிறது.
அ.தி.மு.க.,வில் சந்திரசேகரன் மற்றம் அ.தி.மு.க., ஆதரவில் எம்.பி., ஆன பா.ம.க., அன்புமணி ராமதாஸ் பதவி காலமும் ஜூலையில் முடிகிறது. எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாக உள்ளது. அதை தே.மு.தி.க., பெற நினைத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க., பொது செயலாளர், ” நாங்க அப்படி சொல்லவே இல்லையே” என்று கூறியதால் தே.மு.தி.க., அப்செட் ஆகிவிட்டது.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்கு பல்வேறு வியூகங்கள் அமைத்து வந்துள்ள அ.தி.மு.க., தலைமை தேர்தல் வர இன்னும் ஒராண்டே உள்ள நிலையில், மக்கள் ஓட்டுகளை கச்சிதமாக பெற பல கட்ட நடவடிக்கை எடுத்து வந்துள்ள நிலையில், ஏற்கனேவ, தென் மாவட்டங்களில் அதிக ஓட்டுகள் உள்ள முக்குலத்தோர் ஓட்டை சிந்தாமல் சிதறாமல் கவர்பண்ண ஒரு தீவிர தீர்க்கமான முடிவு எடுத்துள்ளார் அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது ஏற்கனவே, எம்.பி., சீட் பழனிச்சாமி ஆதரவாளர்கள் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என பிரித்த போது, ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோரை கவர் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனது தீவிர ஆதரவாளரான தர்மருக்கு அ.தி.மு.க., எம்.பி., சீட் வாங்கி தந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அமோக ஆதரவை பெற்றார். தர்மர் முக்குலத்தோரில் மறவர் சமூகத்தை சேர்ந்தவர், இச்சமுகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட நிலையில், அதே பாணியில் முக்கலத்தோரில் அகமுடையார் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயம் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.,விற்கு வேவ்வேறு கட்சியில் இருந்தாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தந்துவிடுவார்கள் என்றும், அதுமட்டுமின்றி, தெய்வீகத்தையும், தேசத்தையும் தன் இரண்டு கண்களாக போற்றி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்து வாழ்ந்த மண்ணான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்குவதன் மூலம் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று முடிவு எடுத்துள்ளார் எடப்பாடியார் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் இச்சமுதாயத்தில் உள்ள சுமார் 30 லட்சம் ஓட்டுக்களில் பெருமளவில் அ.தி.மு.க.,விற்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
தற்போது தென்மாவட்டங்களில் மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு என்ற நிலையில், மதுரையைவிட இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கினால்தான் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் ஏற்கனவே இங்கு ஒ.பி.எஸ்., தன் பங்கிற்கு வழங்கிவிட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி வழங்கினால்தான் சரிசமமாக ஆகம் என்பதால் இராமநாதபுரம் மாவட்டத்திற்குதான் அதிக வாய்ப்பு என்று அ.தி.மு.க., மேல்மட்டத்தில் பேசப்படுகிறது.
இந்த பேச்சையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் கொடுப்பது என்றால் யாரை தேர்வு செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழுந்த போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பணியில் தீவிர மாக தற்போது உள்ள மாவட்ட செயலாளருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வரும் அதுமட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அமோக செல்வாக்குடன் இருந்து வரும் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் பெயரை பலரும் கூறி வருகின்றனர். ஆர்.ஜி.மருதுபாண்டியன் பொதுவாக அ.தி.மு.க., பொது செயலாளர் எந்த ஒரு நிகழ்ச்சி, ஆர்ப்பாட்ட்ம், கூட்டம், கண்டன கூட்டம், ஜெ., எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட்டம் என அறிவித்தால், இராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பிரமாண்டமாக நடத்தி நற்பெயரை பெற்று வந்ததுடன், மண்டபம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,விற்கு சவால் விட்டு அமோக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன், தனது மனைவி டாக்டர் சித்ரா மருது மண்டபம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள தமிழகத்தின் பெரிய ஊராட்சியான பட்டணம்காத்தான் ஊராட்சியில் போட்டியிட வைத்து தொடர்ந்து இரண்டு முறை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக பல திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வந்ததால் ஊராட்சி தலைவர் பதவியில் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் பதவியில் ஆர்.ஜி.மருதுபாண்டியன் நிரந்தரமாக மக்கள் பிரதிநிதியாக இருப்பார்கள் என்று மக்களே பாராட்டி முத்திரை குத்தி உள்ளனர் அந்தளவு செல்வாக்கில் உள்ளார். அதனால், ஆர்.ஜி.மருதுபாண்டியன் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தால், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற பம்பரமாக சுழன்று சமுதாய ஓட்டு கட்சி ஓட்டுக்களை பெருவாரியாக அள்ளி தந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.
அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரகசிய சர்வேயில் தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் சமுதாய ரீதியாகவும் மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் இருக்கும் முக்கிய நபர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் என்ற தகவல் சென்றுள்ளதாம். பொறுத்து இருந்து பார்ப்போம். யாருக்கு ஜாக்பாட் அடிக்க போகுது என்று…. ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தால்தான் கண்ணியமாக இருக்கும் என்பது கட்சியின் கடைக்கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.