தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் எழுந்தருளி யுள்ள வாராகி அம்மன், மற்றும் 21 அடி உயரமுள்ள வாராகி அம்மன் சிலைக்கும், மற்றும் 108 வாராகி அம்மன் சிலைகளுக்கும் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சிவலிங்கம், சுசி மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



