நாகர்கோவில் – அக்- 24,
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில்
கூட்டம் நடத்தாமல் மினிட் புத்தகத்தில் தலைவரே தன்னிச்சையாக தீர்மானத்தை யாரிடம் கேட்காமல் அலுவலகத்தில் உள்ளே வைத்து எழுதி சில வார்டு உறுப்பினரிடம் மட்டும் கையெழுத்து பெற்று , புத்தளம் பேரூராட்சியில் நடைப்பெற வேண்டிய பணிகளுக்கு ஆன்லைன் ஓப்பன் டெண்டர் விடாமல் ஆப் லைன் டெண்டர் விட்டு ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்படுவதாகவும் அதைப்போல் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய செயல் அலுவலர் காலாராணி தடையாக இருப்பதாகவும் கூறி அதிகாரியை கண்டித்து திமுக உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேர்
தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி 1 வதுவார்டு உறுப்பினர் பால்தங்கம் ( துணைத்தலைவர்) திமுக. 2வது வார்டுஉறுப்பினர் விஜயன்(அ.தி.மு.க) 3 வதுவார்டுஉறுப்பினர்.செல்வகீதா (பாஜக) , 4வதுவார்டு உறுப்பினர்(தனலிங்கவல்லி) , பாஜக , 7 வதுவார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி , (பாஜக), 10 வதுவார்டு உறுப்பினர் ஜெகநாதன்.(பாஜக), 13வது வார்டுஉறுப்பினர் சிவகந்தன்(அ.தி.மு.க), 14வது வார்டுஉறுப்பினர் முருகன் (தி.மு.க) ,15வது வார்டுஉறுப்பினர் விஜயகல்யாணி. பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.