கிருஷ்ணகிரி, ஆக.9 – கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லகண்ணாள் தலைமையில் நுகர்வோர் குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கே.எம்.சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நியாய விலை கடைகளில் விற்கும் நல்ல தரமான அரிசிகளை, சிலர் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாகவும், இதையும் தடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அரிசிகளை காவேரிப்பட்டினத்தில் பெரும்பாலான நிப்பட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வருகிறது என்றும் அதிகாரிகள் நிப்பெட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு சென்று அடிக்கடி ஆய்வு செய்திட வேண்டும் எனவும், இந்த ரேஷன் பொருட்களின் எடை மோசடியை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அரிசி, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பாக்கெட் செய்து விற்க வேண்டும் எனவும், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நியாய விலை கடைகளை சரிவர திறக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் இளம் வயது திருமணம் நடைபெற்று வருவதாகவும், அதை தடுத்திட அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கையில் எடுக்க வேண்டும், இதேபோல் சுற்றுப்புறம் உள்ள கிராமப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்யும் டாக்டர்கள், மற்றும் செவிலியர்கள் சரிவர வருவதில்லை, பல்வேறு இடங்களில் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இது போன்ற 18 தீர்மானங்களை கோரிக்கையாக வைத்து அதற்கான மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லக் கண்ணாலிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது போன்ற நடவடிக்கைகளை சரி செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.



