By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
சென்னை

சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?

Last updated: June 28, 2025 8:01 pm
June 28, 2025
77 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 28 –

சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கை மேம்படுத்துவது தொடர்பாக மீனம்பாக்கம் ரியாலிட்டி பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கார் பார்க்கிங் இடத்தில் திரையரங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பி.வி.ஆர்.ஐனாக்ஸ் மல்டி பிளக்ஸ் நிறுவனத்துடன் துணை ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

திரையரங்கு அமைய உள்ளதைக் குறிப்பிட்டு கார் பார்க்கிங் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் ஒப்புதல், சென்னை மாநகர காவல் ஆணையரின் தடையில்லா சான்றுகள் பெற்று கட்டுமானங்கள் முடித்து 2023 பிப்ரவரி முதல் திரையரங்குகளும் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்டப்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை எனக் கூறி திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஜூன் 20 ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பி.வி.ஆர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விமான நிலைய பார்க்கிங் பகுதியில் உணவகங்கள், கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்குக்கு அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் 20 கோடி ரூபாய் திரையரங்குக்காக முதலீடு செய்துள்ளதாகவும் பி.வி.ஆர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து மனுவுக்கு ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
நல சங்கம் சார்பில் பொங்கல் விழா
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

June 28, 2025
71 Views
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
மார்த்தாண்டம் அருகே வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
குட் லைஃப் பவுண்டேஷன் தலைவர் விக்னேஸ்வரன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account