மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தை செங்கை கண்ணன் தலைமையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் தொழிலாளர் அலுவலகத்தில் பழனி நாடார், செங்கை கண்ணன், மோகன் அருணாச்சலம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்
காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழாவில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, கொடி குறிச்சி முத்தையா ,ஆலங்குளம் செல்வராஜ், மோகன் அருணாச்சலம் , தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வட்டாரத் தலைவர்கள் கதிரவன், பெருமாள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



