கிருஷ்ணகிரி அக்;19. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வட்டார நகர பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில பொது குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் காவேரிப்பட்டணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சி மாவட்ட வட்டார நகர பொறுப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவரை நியமிக்கும் வரை, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரின் மேற்பார்வையில் மாவட்ட பொறுப்பாளரையும், சட்டமன்ற பொறுப்பாளரையும் நியமனம் செய்ய வேண்டும், வருகின்ற தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது என்றும், காங்கிரஸ் அலுவலகமாம் காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தை புதுப்பித்து
புது பொலிவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதில் மாவட்ட பொருளாளர் உமர், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் நகரத் தலைவர்கள் தக்காளி தவமணி, வின்சென்ட், கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், ஆறுமுகம், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் கவியரசு, மாவட்ட செயலாளர்கள் மனோகரன் சம்பத்,சதாசிவம், சரவணன், யுவராஜ், ஆறுமுக சுப்பிரமணி, டேனியல், பழனிசாமி, நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை எம்.எஸ்.வி சரவணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.