நாகர்கோவில்: ஏப்ரல் 18:
இந்திய அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற கார்மல் மேல்நிலைப் பள்ளி மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று பாராட்டினார்.
தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்
ஹெரால்டு ஷாம் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
கார்மல் பள்ளி மாணவர்கள் 46 பேர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட
ஆசிரியர் வெர்ஜின் வரவேற்புரை கூறினார்.ஆசிரியர்
மகிபன் தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வில் மாணவர்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாண் உபால்ட், அமல்ராஜ், என். எம். எம். எஸ் .தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரால்ட் சைமன், ஜெப்ரின் வளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி
மாநில அளவில்
சாதனை புரிந்த மாணவர் மற்றும் தேர்ச்சி பெற்ற 46 மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
கல்வியுடன் ஒழுக்கமும் ,வறுமை வந்தாலும் நேர்மையான நடத்தையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் மாணவர்கள் வாழ்வில் சாதனை புரியலாம் என்று தனது வாழ்வியல் அனுபவத்தை எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
முதலிடம் பெற்ற மாணவருக்கு பொன்னாடை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என்.எம்.எம்.எஸ்.தேர்வின் திட்ட இயக்குநர் அருட்தந்தை ஜேசு நேசம் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
ஆசிரியர் இன்னாசி ராஜா
நன்றி கூறினார். ஆசிரியர் டைட்டஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.