தேனி செப் 7:
தேனியில் உணவு பாதுகாப்பு துறை நடத்தப்பட்ட சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள வணிக நிறுவனங்களில் காலத்திற்கு ஏற்ப நவீனமான அதிகம் மைதா கலந்த உடலுக்கு தீங்கு விளைக்கும் நூடுல்ஸ் சிப்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன இந்த புகாரை எடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் நகரின் பிரதான வீதிகளான எட மால் தெரு வாரச்சந்தை பகுதி என் ஆர் டி நகர் அல்லிநகரம் மார்க்கெட் வீதி ஆகிய பகுதியில் உள்ள பணி நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் இதில் காலவதியான சிப்ஸ் நூடுல்ஸ் எலியால் கடிக்கப்பட்ட உணவு பொருட்கள் உள்பட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர் மேலும் அந்த நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்தல் கூடாது என்றும் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் காலவாதியான பொருட்கள் நூடுல்ஸ் சிப்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை தொடர்ந்து விற்பனை செய்தால் வணிக உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.