By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்

Last updated: September 13, 2024 1:03 pm
September 13, 2024
73 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 13

 

 கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 விவசாயிகளின் நலன் கருதி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாழக்குடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதன் வாயிலாக இறச்சகுளம், தாழக்குடி, திருப்பதிசாரம், பீமநகரி, வெள்ளமடம், தோவாளை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்தி செய்து அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதற்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 300-ம், ஊக்கத் தொகையாக ரூ. 105-ம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.  

தற்போது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அரசு கொள்முதல் செய்யும் நெல் 17 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் இருக்க வேண்டும். அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்க மறுக்கிறது. மேலும் இந்நெல் மூடைகளை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை தனியார் ஆலைக்கு கொண்டு செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. தாழக்குடியில் அமைந்துள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் மேற்கூறப்பட்ட விதி முறைகளால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது வியர்வை சிந்தி உழைத்த உழைப்பின் பயனாக கிடைக்கப் பெற்ற நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் நெல் கொள்முதல் நிலையங்கள். ஈரப்பதத்தை காரணம் காட்டி, நெஞ்சில் ஈரம் இல்லாமல் விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் இருப்பது விவசாயிகளை மீளா துயரில் ஆழ்த்துவதாகும்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெறும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தாழக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் 16 ஆயிரத்து 380 நெல் மூடைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகளை வேதனை படுத்துவது இழுக்காகும். இச்செயல் கண்டிக்கத்தக்கதாகும். இதைப்போன்று கடுக்கரை, திட்டுவிளை, செண்பகராமன்புதூர்ள மற்றும் பறக்கை பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதே நிலை தான் உள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு வேளாண்மைத்துறை மூலம் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் மூடைகளின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருக்கலாம் என்ற நிலையை உருவாக்கி விவசாயிகளின் நலனை பாதுகாக்க உதவிடுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்
எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காபட்டணத்தில் சொகுசு காரில் மண்ணெண்ணெய் கடத்தல்: 400 லிட்டர் பறிமுதல்

May 18, 2026
34 Views
அரசு வழக்கறிஞர் மதியழகனுக்கு பாராட்டு
கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account