தஞ்சாவூர். மே.14
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .இதற்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 542 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர் அடுத்துள்ள மைக்கேல் பட்டி ஆற்று தெருவை சேர்ந்த கவிதை என்பவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற எனது கணவர் சேதுராமனை மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்தார். இந்த மனு உடனடி யாக பரிசீலனை செய்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேதுராமன் மீட்கப்பட்டதையொட்டி கவிதா தனது குடும்பத்தினுடன் நேரில் வந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜக சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேராவூரணி வட்டத் தைச் சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் என்பவர் குவைத் நாட்டில் பணி புரிந்த போது தீ விபத்தில் இறந்த தால் அவருக்கு சேர வேண்டிய இழப்பீடுத் தொகை ரூபாய் 12 லட்சம் 64 ஆயிரத்து 50 கான காசோலையை அவரது தாயார் லதாவிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருவிடைமருதூர் வட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்த மகாராஜ் சித்தி விநாயகம் என்பவர் சவூதி அரேபியாவில் இறந்ததால் அவரு க்கு சேர வேண்டிய சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை ரூபாய் 8 லட்சத்து 52, ஆயிரத்து 723 கான காசோலையை அவரது மனைவி சாந்தியிடம் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் ,பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக் கண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.