ஈரோடு ஏப். 14-
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரகூர் ஊராட்சி, கத்தரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இப்பகுதியில் ரோடு வசதி மற்றும் போக்கு வரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். எனவே அடர்ந்த காட்டுப் பகுதியில்
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நடந்து சென்றார். அவரை தொடர்ந்து அதிகாரிகளும் மலைப்பகுதியில் நடந்து சென்றனர்.
இந்த குக்கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் மனுக்களை பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது
பிறப்பு சான்று, ஆதார் அட்டை, சாதி சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை மிக முக்கியமானதாகும், இத்தகைய சான்றிதழ்கள் மூலமாக அரசின் திட்டங்களை பெற முடியும். அதே போன்று பழங்குடியினர் அடையாள அட்டை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். எனவே, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சான்றிதழ்களை மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்டு அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு கத்திரிமலையில் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



