வேலூர்_31
வேலூர் மாவட்டம் ,கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் ,கத்தாழம்பட்டு, நஞ்சுக்கொண்டாபுரம் ,கீழ்வல்லம், கீழ் பள்ளிப்பட்டு, ஆகிய கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லம் கிராமம் குமரன் மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்தனர். இதில் அனைத்து துறை அலுவலர்கள், நஞ்சுக்கொண்டாபுரம் தலைவர் சீதா தமிழ்செல்வன் , கீழ் அரசம்பட்டு நஞ்சுகொண்டாபுரம், ஒன்றிய குழு உறுப்பினர் ,கவுன்சிலர் நதியா புருஷோத்தமன், வல்லம் பள்ளிப்பட்டு வல்லம் தலைவர் சிவகுமார் ,கீழ்பள்ளிபட்டு தலைவர் விஜயபாஸ்கர் , வல்லம் பள்ளிப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள், கத்தாழம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் கவுன்சிலர் தங்கம்மாள் கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.