தோவாளை டிச. 23
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாட ப்பட்டது .விழாவிற்கு கல்லூரி தாளாளர் அட்வகேட் அஜய் ஆனந்த் தலைமை வகித்தார்.
கல்லூரியின் நிதி மேலாளர் டாக்டர் சுந்தர் சிங் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்பென்சர்பிரதாப் சிங் ,பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குமரி பேராயத்தின் உப தலைவர் டாக்டர் முத்துசுவாமி கிறிஸ்து தாஸ் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்கி 2025 ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் காலண்டரை வெளியிட்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டி கல்லூரி தாளாளர் ,கல்லூரி நிதி மேலாளர் மற்றும் கல்லூரி முதல்வர் அனைவருக்கும் வழங்கினார்.
இதில்,இன்ஜினியரிங் கல்லூரி போர்டு மெம்பர்ஸ் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .விழாவில் 100 ஏழைகளுக்கு புத்தாடை வழங்கி,மதிய உணவு வழங்கப்பட்டது.