திண்டுக்கல் புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி லூர்து மரிய
பிரிஜிட் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருள்மேரி முன்னிலையில் வகித்தார். இந்நிகழ்வின் போது நடன நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ் நாடகம், கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல், கிறிஸ்மஸ் தாத்தா நடனம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாட்டாண்மை Dr.N.M.B.காஜாமைதீன் சிறப்புரையாற்றி பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் தொன் போஸ்கோ சமூக சேவை மையத்தின் சமூகப் பணி இயக்குனர்
அருட்தந்தை சி. ஆல்பர்ட் யேசுதாஸ், சேசுராஜ், பள்ளி ஆசிரியை பெருமக்கள், பள்ளி மாணவிகள்
கலந்து கொண்டார்கள்.