By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.

Last updated: April 22, 2025 11:37 am
April 22, 2025
37 Views
Share
SHARE

மதுரை ஏப்ரல் 20
மதுரை மாநகராட்சி சித்திரை திருவிழா 2025 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிகள். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆணையாளர் சித்ரா விஜயன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சித்திரை திருவிழாவினை சிறப்பாக நடத்திட மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் மதுரை சித்திரை திருவிழா எதிர்வரும் 28.04.2025 முதல் 17.05.2025 வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வுகளாக தினந்தோறும் அருள்மிகு மீனாட்சியம்மன் நான்கு மாசி வீதிகளில் வீதியுலா வருதல், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கும், திருவிழாவினை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொள்வார்கள்.

அதன்படி , மதுரை மாநகருக்கு அருள்மிகு கள்ளழகர் அழகர்கோவில் மலையிலிருந்து புறப்பட்டு மதுரை மாநகருக்கு வருகை தரும் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான அழகர்கோவில் மெயின் ரோடு, கடச்சனேந்தல், மூன்று மாவடி, சர்வேயர் காலனி, புதூர் மற்றும் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகள், அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகள், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், தேர் வீதியுலா வரும் நான்கு மாசி வீதிகள் உள்ளிட்ட சித்திரை திருவிழா நடைபெறும் முக்கிய இடங்களில் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்தல், நிரந்தர மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைத்தல், தூய்மைப்பணிகள், மரத்தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கிய லெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் முத்து, காமராஜ், ஆரோக்கிய
சேவியர், மயிலேறிநாதன், உட்பட உதவிப் பொறியாளர்கள், மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதர் தெரசா டிரஸ்ட் துவக்க விழா
அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிக்கு
குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
சித்தன்தோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்

September 11, 2025
50 Views
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
கோபிசெட்டிபாளையத்தில் ராமராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு!!
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account