நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா 03/05/2025 சனிக்கிழமை முதல் 12/05/2025 திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது.
ஒன்றாம் திருவிழாவை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 8 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி இராமகிருஷ்ணன், அறங்காவலர் உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், ஒன்பதாவது வார்டு நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன்,வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ண பக்தர்கள்,மற்றும் திருக்கோயில் நிர்வாகம் இணைந்து விழாவினை சிறப்பாக செய்து வருகின்றார்கள்.



