நாகர்கோவில் ஏப். 24
தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
16339 மும்பை சிஸ்டி- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மும்பை சிஎஸ்டியில் இருந்து மே 6, 7,8,10, 13, 14, 15 ஆகிய தேதிகளில் இரவு 8 35 மணிக்கு புறப்படுவது குண்டக்கல், கூட்டி, ரேணிகுண்டா, திருப்பதி, பகலா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அனந்தபூர், தர்மாவரம், கடிரி மதன் பாலே பிலர் ரயில் நிலையங்கள் செல்லாது.
இதனை போன்று ரயில் எண் 16340 நாகர்கோவில்- மும்பை சிஸ்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மே 5, 6, 7, 9, 12, 13,14, 16 ஆகிய தேதிகளில் காலை 6 45 மணிக்கு புறப்படுவது திருப்பதி, ரேணிகுண்டா, கூட்டி, குண்டக்கல் வழியாக இயக்கப்படும் மேலும் மதன்பாலே, கடிரி, தர்மாவரம் மற்றும் அனந்தபூர் செல்லாது.