முதுகுளத்தூரில் அதிமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் முதுகுளத்தூர். பிப்25, முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் முன்னாள் எம் எல் ஏ மலேசியா பாண்டியன், நகர கழக செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் கர்ணணன், கருப்பசாமி, நகர் அவைத்தலைவர் கருப்பசாமி, அம்சராஜ், கண்ணன் உள்பட அதிமுகவினர் பெருந்திரளாக கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.