கன்னியாகுமரி பிப் 2
அஞ்சுகிராமம் பேரூராட்சி 11 வது வார்டுக்குட்பட்ட சத்திய நகரில் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பேரூந்து நிறுத்தத்திற்கு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் மேற்கொண்ட பல் வேறு தீவிர முயற்சியின் காரணமாக அனுமதி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு 11வது வார்டு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் தலைமை தாங்கினார். மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை இணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ண பெருமாள், அஞ்சுகிராமம் பேரூர் ஜெ.பேரவை செயலாளர் ஜி.மணிகண்டன், காரவிளைச் செல்வன், 9வது வார்டு கவுன்சிலர் வீடியோகுமார் ஆகியோர் முன்னிலை வகித்ததனர்.
பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி பிச்சாண்டி தம்பான் பேருந்து நிறுத்தப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
விழாவில் அஞ்சுகிராமம் ஊர் நலச்சங்கத் தலைவர் ஹிட்லர்
மணிவண்ணன், ராஜலிங்கம், விஜயன், சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன், லக்வின், சுப்பாராம், பிரம்மசக்தி, ஐய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிறுத்தத்திற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்ற கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.