திருப்புவனம்:டிச:10
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள செங்குளம் கிராம பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான செங்குளம் முதல் விருதுநகர் வரையில் புதிய வழித்தட பேருந்து சேவை இன்று முதல் அமலுக்கு வந்தது.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரது பரிந்துரையின் பேரில்
திருப்புவனம்
செங்குளம் கிராமத்தில் இருந்து மேலக்கள்ளங்குளம் முஷ்டக்குறிச்சி காரியாபட்டி மல்லாங்கிணறு வழியாக விருதுநகர் வரையில் புதிய நகரப் பேருந்தை விருதுநகர் மண்டல பொது மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி மேலாளர் வணிகம் மற்றும்
கிளை மேலாளர்கள் முக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.