ஆரல்வாய்மொழி, ஜன.03: ஆரல்வாய்மொழியில் நெய்யாற்றங்கரை பிரஷ்கிளப் 20 – ஆம் ஆண்டு விழா முன்னிட்டு தீப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெய்யாற்றங்கரை பிரஷ்கிளப்பின் 20-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ஆங்கிலேயர் காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் செய்கின்ற குற்றங்களை மக்களுக்கு எடுத்து கூறுகின்ற வகையில் செயல்பட்ட மூத்த புகழ்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர் ராமகிருஷ்ணன்பிள்ளையினை 1910 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி ஆரல்வாய்மொழியில் வைத்து ஆங்கிலோர்களால் நாடு கடத்தப்பட்டார். இதனை நினைகூறும் வகையில் நெய்யாற்றங்கரை பிரஸ் கிளப்பின் 20 வது ஆண்டு விழா தீப யாத்திரையினை ஆரல்வாய் மொழியில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நெய்யாற்றங்கரை பிரஷ் கிளப் செயலாளர் சசிலா நாயர், தலைமை வகித்தனர். பிரஷ்கிளப் தலைவர் அஜிபதனூர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விழுந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு தீப ஜோதியினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தீப ஜோதியினை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் யாத்திரையில் செல்கின்றவர்களிடம் வழங்கினார். இந்த தீப யாத்திரையானது ஆரல்வாய்மொழி, வழியாக நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக நெய்யாற்றங்கரை பிரஷ் கிளப் அலுவலகத்திற்கு சென்றடைகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், காந்தி நித்ர மண்டல் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபிகுமார், பிரஷ்கிளப் உறுப்பினர் பிரதிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்