நாகர்கோவில் பிப் 13
குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைப்புக்கு குமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் குமரேசன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டை சில சமூக வீரோதிகள் உடைத்துள்ளனர்.
இச்செயலை குமரி மாவட்ட ஆதித்தமிழர்கட்சி கட்சி
வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகளை
குமரி மாவட்ட காவல்துறை
கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.மேலும் அதே இடத்தில் பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை பாதுகாப்புடன்
மாவட்ட நிர்வாகம் அமைத்திடவேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.