திண்டுக்கல் மாவட்டம்
வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாலை
3 மணிக்கு தொலைபேசி எண்100 இல் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒருவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து சுப்பிரமணிய சிவாபஸ் நிலையத்தில் இரவு கடைகள் அடைக்கப்பட்டது பஸ் நிலையத்திற்குள் உள்ளே செல்ல பயணிகளுக்கும் பஸ்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. பஸ் நிலையம் முன்பாக பேரிகாடுகளை வைத்து போலீசார் அடைத்தனர்.
நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சிலை மலை மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி அனைத்து வாசல்களையும் அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை வைத்து விசாரணை செய்தனர். அதில் பேசியவர் மதுரையைச் சேர்ந்த அழகு என்பவரது மகன் அன்பு (வயது 25) என்பதும் அவர் மனநலம் பாதித்தவர் என்பதும் தெரியவந்தது இதன் மூலம் போலீசார் அன்புவை கைது செய்தனர் அன்பு மனநலம் பாதித்தவர் என்பதால் அவர் வெடிகுண்டு வைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி காலை 5.30 மணிக்கு மீண்டும் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் நிலையம் இயங்காததால் கொடைக்கானல்சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.