ராமநாதபுரம், மே 6 –
பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் ஏப்.22 ல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனிதாபிமானமற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அரண்மனை முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்பு ராமு, மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, கவுன்சிலர் குமார் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர்
புரட்சி கவி தாசன்
சிறப்புரை ஆற்றினார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தனியர், வங்க தேசத்தவரை கணக்கெடுப்பு செய்து வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.
பிரதமர் மோடி கண் அசைத்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இல்லாமல் போகும். 26 பேர் படுகொலைக்கு உலக நாடுகள் கண்டித்துள்ள போது, இது நாள் வரை எவ்வித கண்டனம் தெரிவிக்காத பாகிஸ்தானின் மனித நேயமற்ற செயல் கண்டிக்கத் தக்கது இவ்வாறு அவர் பேசினார்.
.
நகர் தலைவர் நாகராஜன், முன்னாள் நகர் தலைவர் வீரபாகு,
முன்னாள் மாவட்ட தலைவர் சண்முக ராஜா, பொருளாதார பிரிவு செயலாளர் சண்முகநாதன்,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி,
வழக்கறிஞர்கள் சவுந்தரபாண்டியன், சிவசங்கர்,
மண்டபம் கிழக்கு மண்டல தலைவர் கதிரவன்,
தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் பரமேஸ்வரன் ஊடகப்பிரிவு தலைவர் குமரன், தரவு மேலாண் மாவட்ட செயலாளர் வராஹி முத்துராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சங்கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics