நாகர்கோவில் – நவ- 30,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி திமுக நிர்வாகம் 100 ரூபாயில் இருந்த வீட்டு வரியை அநியாயமாக 7000 ரூபாயாக உயர்த்தியதை கண்டிக்க பா.ஜ.க கவுன்சிலர்கள் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரப்பரப்பு – போலீஸ் குவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நகர் கோவில் மாநகராட்சியில் நடைபெற்றது மாமன்ற மேயர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பா.ஜ.க, அதிமுக. மதிமுக, திமுக கட்சிகளை சேர்ந்து 52 மாநகராட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கியதுமே கவுன்சிலர்களின் கேள்வியால் கூட்ட்டம் பரப்பரப்பானது – இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பா.ஜ.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து மாநகராட்சி வளாகத்தில் வந்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் – நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, சொத்து வரிகளை உயர்த்தியதை கண்டித்தும். 100 ரூபாயில் இருந்து வீட்டு வரி 7000 ரூபாயாக உயர்த்தியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – இதனால் பரப்பரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் குவிக்கப்பட்டது .