தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மற்றும் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், பெருமாள், ஈஸ்வரன் , தென்காசி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்