வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட முப்படை நகர் திருப்பதி நகர் பாஸ்கர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கைகளை ஏற்று பல ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி மற்றும் தண்ணீர் குழாய் இல்லாமல் அவதிப்பட்டதால் 15 வது நிதி குழு மானியத்திலிருந்து சுமார் 27,50,000 ரூபாய் நிதி ஒதுக்கி 60000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை போடப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் மற்றும் குணா தயாநிதி ஒன்றிய கவுன்சிலர் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் பத்திரிக்கையாளர் எஸ்.நந்தன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.