ஈரோடு ஜூலை 3
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கை பாளையம் இரட்டை வாய்க்கால் செங்குந்தர் குல சொக்க முதலி கூட்ட தெய்வங்களான பால விநாயகர் பால முருகர் கன்னிமார் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28 ஆம் தேதி கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் தரிசன ஹோமம் நவக்கிரக ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது இன்று காலை பெருந்தலையூர் வாணி நதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது மாலையில் கவுண்டம்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சீர்கூடை மற்றும் முளைப்பாலிகை அழைத்து வரப்பட்டது
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பால விநாயகர் பாலமுருகர் கன்னிமார் கருப்பணசாமி ஆலய கோபுரம் மற்றும் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை கவுந்தப்பாடி செல்லியாயி அம்மன் கோவில் கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் வாசுதேவன் மயில்வாகனன் குழுவினரின் மங்களை இசை நடந்தது விழாவையொட்டி இன்று முதல் 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் ஆறுச்சாமி பொருளாளர் குமரவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.