By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா
அரியலூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா

Last updated: January 2, 2025 10:28 am
January 2, 2025
152 Views
Share
SHARE

அரியலூர், ஜன;02


குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி   மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


தொடர்ந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.


அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை கடந்த 2000ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் கொண்டாடப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அய்யன் திருவள்ளுவர் சிலை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவரின் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்ந்து வெள்ளி விழாவினை முன்னிட்டு பொது நூலகத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த அரியலூர் மின்நகரைச் சேர்ந்த வாசகர் மு.கார்த்திகேயன், இரண்டாமிடம் பிடித்த பெரியதிருக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ரா.விஷ்வா, மூன்றாமிடம் பிடித்த கட்டையன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி சு.ஜனனி ஆகியோருக்கும், இதேபோன்று பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த இடையத்தான்குடி அரசு நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி க.திவ்யதர்ஷினி, இரண்டாமிடம் பிடித்த அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி ரா.அபர்ணா, மூன்றாமிடம் பிடித்த செந்துறை அறிஞர் அண்ணா மழலையர் தொடக்கப்பள்ளி 1 ஆம் வகுப்பு மாணவன் இ.தர்ஷித் ஆகியோருக்கும், மேலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்த த.பொட்டக்கொல்லை, அரசு மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ர.இனியா, இரண்டாமிடம் பிடித்த நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி பி.ரே.தாரகை, மூன்றாமிடம் பிடித்த சிலால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவி ம.நிவந்திகா ஆகியோருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி

வழங்கினார்.


பின்னர், நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.ரே.தாரகை தான் சேமித்து வைத்திருந்த ரூ.1100/- தொகையினை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாள்
கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி

September 24, 2024
84 Views
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account