தென்காசியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு.
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு வார விழாவானது கடந்த 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வரும் நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் மருதப்பன் மற்றும் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்த பேரணியானது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தபால் நிலையம் வரை நடைபெற்றது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப் குமார் மற்றும் ஏராளமான தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்று தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினர்.