By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள்
ஈரோடு

அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள்

Last updated: April 6, 2025 11:19 am
April 6, 2025
36 Views
Share
SHARE

ஈரோடு ஏப் 5
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்தில் அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆசனூர் வனக்கோட்டம் துணை இயக்குநர் சுதாகர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) தலைமையில் நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். ஆசனூர் வனக்கோட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றம் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் பட்டியல் பழங்குடியினர் வாழும் கிராமங்களில் 21 சூழல் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகஹள்ளி, ஆகிய வனச்சரகங்களில் 44 வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்படி திட்டத்தின் கீழ் குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள், சமுதாய வாழ்வாதார மேம்பாட்டு பணிகள். தனிநபர் தொழில் தொடங்குவதற்கான இயந்திரங்கள் வழங்குதல், சிறு தொழில் தொடங்க தனிநபர் மற்றும் குழுக்களுக்கான நிதியுதவி போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு குழு உறுப்பினர்கள் பயனடையும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் அவ்வப்போது வனத்துறை ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அமைப்புசாரா தொழில்களான கொத்தனார், சித்தாள், மின்பணியாளர். தச்சர் உள்ளிட்ட 54 வகையான கட்டுமான தொழில்கள் மற்றும் தையல், சிற்ப வேலை, ஒட்டுநர், வனப் பொருட்கள் சேகரித்தல் உள்ளிட்ட 62 வகையான தொழில்களில் ஈடுபட்டு வரும் பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர்களுக்கு தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 20 தொழிலாளர் நல வாரியங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுபாட்டில் இயங்கும் நலவாரியம் ஆகியவை தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் குடும்ப
நலன் மேம்பாடு குறித்து வழங்கி வரும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் தகுதியான தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவும் விழிப்புணர்வு மற்றும் பதிவு செய்தல் முகாம் வனத்துறை ஒருங்கிணைப்பில் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், ஜீரகஹள்ளி வனச்சரக அலுவலர்கள், வனத்துறை களப்பணியாளர்கள், சூழல் மேம்பாட்டு மற்றும் வனக்குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பழங்குடியின தொழிலாளர்கள் என சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.இராஜகோபால் அவர்கள் பழங்குடியின நல வாரியத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நல வாரியங்களின் விவரங்களையும், அவற்றின் பதிவு செய்யும் முறைகளையும் தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பணி பாதுகாப்பு மற்றும் குடும்ப மேம்பாட்டிற்கு கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, வனத்துறை களப்பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்களில் சுமார் 50 பேர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பாளையத்தில் கன்னிமார் -கருப்பராயன்கோவில் கும்பாபிஷேகம்
தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 

May 23, 2024
103 Views
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account