ஈரோடு ஜன 6
கொங்கு மண்டல த.மா.கா நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் யுவராஜா துணை தலைவர் விடியல் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், துறை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி கே வாசன் மாவட்ட வாரிய உறுப்பினர்
அட்டை வழங்கி பேசினார் .
முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து வில்லரசம்பட்டி நால் ரோட்டில் ஜி கே வாசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது
அண்ணா பல்கலைக் கழக மாணவி சம்பவத்திற்கு உரிய விடை கிடைக்காமல் இருப்பதால் அனைத்து மாணவி பெற்றோர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள் .
குற்றவாளிக்கு அரசியல் பின்புலம் உள்ளது.சார் க்கு விடை கிடைக்க வேண்டும் .அப்போது தான் அரசை நம்புவார்கள்.
இது போன்ற தொடர் பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் என்பது தமாகாவின் எண்ணம்
போதை பொருட்களால் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள் கூட எமர்ஜென்சி போல இருக்கிறது என கூறுவது அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் அகில இந்திய விவகாரமாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.மாணவி , பெற்றோர்களுக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் ..
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை என்பது சட்டம் அனைவருக்கும் சமம்..அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏதோ ஒன்றை மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர்
அதனால் தான் சிபிஜ விசாரணை வேண்டும் .
6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டமன்ற தேர்தல் வரும் போது ஆளும் அரசை நீக்குகின்ற வகையில் கூட்டணி அமையும் .
காங்கேயத்தில் காங்கேய மாட்டு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஈரோட்டில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் ..
பட்டாசு ஆலை வெடிவிபத்தை தவிர்க்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு பொங்கல் பண்டிகை தொகுப்பில் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



