மதுரை மார்ச் 15,
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் நீதிக்கட்சி தலைவருமான காலஞ்சென்ற தமிழ்வேள் பி.டி. இராசன் மருமகளும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான பழனிவேல்ராஜன் துணைவியாரும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் முதல் பெண் அறங்காவலருமான ருக்மணி பழனி வேல்ராஜன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் ஆளுமையில் சிறந்த பல்வேறு துறை சார்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கினார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்னுசாமி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கணக்குக்குழு தலைவர் நூர்ஜகான் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.