கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் டாடா நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு,, அவர்கள், தளி சட்டமன்ற உறுப்பினர் .டி.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாடா நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மேலும், டாடா நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 25 இருக்கைகள் கொண்ட தாய் சேய் நல வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் அவர்கள் வழங்கினார். அவ்வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ்குமார், டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் .ஆர்.வி.சி.பதி, குழு நிர்வாகி .ஆதிகேசவன், கெமலங்கலம் பேரூராட்சி தலைவர் .தேவராஜன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் .கோகுல்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சாந்தி, .சதீஷ்பாபு, கெலமங்கலம் வட்டார கண்காணிப்பாளர் .ராஜா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



