திண்டுக்கல்லில்தேசிய தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி 2023 – ஆம் ஆண்டு மூன்று முறை இரத்ததானம் செய்தமைக்கு சிறந்த தன்னார்வலர் விருதை சண்முகத்திற்கு வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.சுகந்தி ராஜகுமாரி ,கண்காணிப்பாளர் டாக்டர்.வீரமணி ,துணைகண்காணிப்பாளர் டாக்டர்.டி.சுரேஷ்பாபு, துணைபேராசிரியர் டாக்டர்.கீதா ராணி ,
இரத்த வங்கி துறைத்தலைவர் டாக்டர்.தமயந்தி ,
இரத்த வங்கி மருத்துவர் டாக்டர்.லில்லிமலர் ஆகியோர் உடன் இருந்தார்.