மதுரை செப்டம்பர் 5,
மதுரை மாநகராட்சியில் உள்ள சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, தகவல் மற்றும் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தனர். ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச தினேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



