ஈரோடு மாவட்டம் : பவானிசாகர் பேரூராட்சி அருகில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சித் தலைவர் மோகன் தலைமையில் புளியம்பட்டி வட்டார வளர்ச்சி சுகாதார மருத்துவம் ராயப்பன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இம்முகாமை
குத்துவிளக்கு ஏற்றியும் பொதுமக்களுக்கு நோய்களின் அறிகுறி பற்றி விழிப்புணர்வு செய்தும், மருத்துவ முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கியும் அனைத்து மருத்துவ பிரிவுகளையும் தனித்தனியாக பார்வையிட்டு
ஆய்வுசெய்ததனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீ. சசிகலா மற்றும் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் வெங்கடாசலம் டாக்டர் பூர்ணிமா டாக்டர் தனலட்சுமி டாக்டர் அம்சா அருள் செல்வி டாக்டர் குருசங்கர் டாக்டர் அம்மு சித்த மருத்துவ அலுவலர் ஜெயசுதா, ஆறுமுகம் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மாவட்ட ஆட்சியரகம் ஈரோடு மாவட்டம்,
வட்டார சுகாதாரம் மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதாரப் புள்ளியலாளர், வட்டாரத்தைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.