திண்டுக்கல் ஏப். 29
திண்டுக்கல் மாவட்டம், கிரியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ச.சாலமோன்ஜோசப் ஆசிரியருக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கான பாராட்டு விழா நண்பர்கள் வளர்ச்சி குழு FRIENDS IMPROVEMENT TEAM’ சார்பாக திண்டுக்கல் வாழ்க வளமுடன் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அருட்பணி எர்னஸ்ட் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நண்பர்கள் வளர்ச்சிக் குழுவின் நிறுவனர் குழந்தைராஜ் வரவேற்புரை ஆற்றினார். ஹேப்பி ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் பிரிட்டோ, தொழிலதிபர் ஆப்பிள் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நண்பர்கள் வளர்ச்சி குழுவின் நிறுவனர்கள் ஜெரோம் அருள் ராயன்,ஆசிரியர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு கேடயம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.ராஜசேகர், கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் இயக்க மாநில தலைவர் ஜஸ்டின் திரவியம், கிறிஸ்துவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேளாங்கண்ணி, திமுக பிரதிநிதி தாடிக்கொம்பு இன்னாசி சேவ், தன்னார்வலர் அமல தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் ஏற்புரையாற்றிய பொழுது வகுப்பறையில் ஸ்மார்ட் போர்ட் இணையவழியில் கல்வி கற்றல், கற்பித்தல் பணியை சிறுமலைபுதூரில் பணிபுரியும் பொழுதே தொடங்கி மாணவர்களின் கற்றல் தேக்க நிலையினைப் போக்கி வெற்றி அடைந்துள்ளதையும், பணியின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நண்பர்கள் வளர்ச்சி குழுவின் ஆசிரியர் ஆல்பர்ட் , சுதன், இன்னாசி, மாரம்பாடி தாமஸ், ஜேசுராஜ், ஜெயராஜ் புகைப்படக் கலைஞர் ஆல்பர்ட் , முத்தழகுப்பட்டி ஆசிரியர் சேகர் ஆரோக்கியம் , ஹெர்க்லீஸ், ஜாஸ்பர் ஜெரின் கொடை ரோடு, ஆரோக்கியதாஸ், முள்ளிப்பாடி குழந்தை பிலிப்ஸ் மற்றும் ஆசிரியர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் நண்பர்கள் வளர்ச்சி குழுவின் இரண்டலைப்பாறை ஆரோக்கிய ஜார்ஜ் நன்றி கூறினார்.