அரியலூர், மே: 28
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme –NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் கீழ்காணும் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கோள்ளப்படுகிறது.
1. https://overseas.tribal.gov.in/ மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
2. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் – 31.05.2024.
3. மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடலாம்.
4. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகள் (Nodal officers) இத்தகவலை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.