[10:41 am, 9/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச.10.
நீலகிரி மாவட்டத்தின் உயிர்நாடியான தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் குன்னூர் ஏலம் மையம் மூலம் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலை தொழிலை நம்பி 65 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக தேயிலை விலை ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருந்து வருகிறது. விவசாய இடுப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.30க்கு குறைவாகவே இருந்து வருகிறது. பல விவசாய சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் இதுநாள் வரை தேயிலைக்கு நிரந்தர விலை இல்லாமல் விவசாயிகள் மாற்றுத் தொழில்களை நம்பி இடம் பெயர வேண்டிய அவல நிலை உள்ளது.
[10:41 am, 9/12/2024] +91 96777 06646: எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளித்தால் விவசாயத்துக்கு முன்னுரிமை தந்து விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் கூடலூரில் செக்சன் -17, நிலப் பிரிவில் வாழும் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு செய்து தராத அவல நிலை உள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு கூட்டணி இல்லாமல் மக்கள் ஆதரவை பெற்று களம் இறங்கும் என மேலும் அவர் தெரிவித்தார். கோத்தகிரி பகுதியில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் படகர்களின் குல தெய்வமான ஹத்தையம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள படகர்கள் சீமானை வரவேற்று மகிழ்ந்தனர்.