நாகர்கோவில் ஜூன் 30
குமரி மாவட்டம் கட்டாத் துறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (43). பிரபல ரவுடியான இவர் மீது கொல்லங்கோடு, இரணியல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தக்கலை போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் எட்வின் ராபர்ட்டை கைது செய்தனர்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ் பி சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று எட்வின் ராபர்ட்டை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் எட்வின் ராபட்டை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 29- பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



