இராமநாதபுரம் ஜூன் 15-
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக இராமநாதபுரம்
மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 1) சுரேஷ்பாபு, மேலாளர் , 2) ஹரிஹரன் ,தற்காலிக பணியாளர் 3) சதீஸ்,இளநிலை உதவியாளர் ,4) அருளானந்தம் அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய
நபர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1,38,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று காலை பரமக்குடி,சேதுபதி நகரில் தங்கியிருந்த சுரேஷ் பாபு அறையை சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத பணம் ரூ. 3,02300 பணமும் மற்றும் முக்கிய அலுவலக ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.