கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர் ஆலோசனையில் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளிகளில் பேருந்துகளை வருடாந்திர ஆய்வு நடந்தது, இந்த ஆய்வில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அன்பு செழியின் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 200க்கும் வாகனங்கள் ஆய்வு செய்தார், அப்போது முறையான முதலுதவி பெட்டி, எமர்ஜென்சி வழி, பிரேக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வாகனத்தின் ஆவணங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அன்பு செழியன் ஆய்வு செய்து 27 வாகனங்கள் நிராகரித்தார்,
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.



