கோவை ஜன:18
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் பூப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் பேரூராட்சி ஏழாவது வார்டு உறுப்பினர் சாந்தி சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்
மேளதாள வாதியங்கள், வான வேடிக்கையுடன் பாரம்பரிய கிராமிய பாடல்கள், கும்மியாட்டம் மற்றும் கோலாட்டம் நடைபெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியோடு ஆடி பாடி விளையாடி மகிழ்ந்தனர்.
ஆனைமலை ஏழாவது வார்டு பொதுமக்கள் அழைப்பினை ஏற்று வருகை தந்த பொள்ளாட்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்களை வார்டு உறுப்பினர் சாந்தி அவர்கள் வரவேற்றார். குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சார் ஆட்சியர் சிறியவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூப்பொங்கல் மற்றும் உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.