மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களுல், 23வது தேசமான இங்கு, மூலவர் தேவராஜன், 13அடி உயர சாளக்கிராம கல்லிலான் ஆனவர். ஆழ்வார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. பெருமாள் மற்றும் தாயார் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்குரத வீதிகள் வழியே திருத்தேரோட்டம் நடைபெற்றது.



