தஞ்சாவூரில் மறைமலை அடிகளாரின் பேத்திக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் அதற்கான சாவியை வழங்கினார்
தஞ்சாவூர். டிச.1
தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.
தனிதமிழ்த்தந்தை எனப் போற்றப் படுகின்ற மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பனின் மகளாகிய லலிதா (வயது 43 )தனது கணவர் செந்தில்குமார் இரு குழந்தைகளு டன் தஞ்சாவூர் கீழவாசல் டபீர் குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என்றும் ,எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடும் மகளிர் உரிமைத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தி வெளியிடப் பட்டது .இதை பார்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வறுமையில் வாழும் தமிழ் தந்தை மறைமலை அடிகளாரின் பேத்திய லலிதாவுக்கு அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் குடும்ப நல நிதி உதவி வழங்கப் படும் என அறிவித்து அதற்கான உறுதி மொழியை கடிதத்தை கட்சியின் தஞ்சாவூர் நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது.
இதனிடையே தமிழக முதல்வரின் உத்தரவுப்படி லலிதாவுக்கு வல்லம் அய்யனார் கோவில் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 8.23 லட்சம் மதிப்பிலான கே 5 என்ற எண்ணுள்ள வீடு கட்டணம் ஏதும் இன்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது
இதற்கான சாவியை லலிதாவிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வழங்கினார் அப்போது மாவட்ட கண்காணிப்பு அரவிந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து லலிதா மேலும் தெரிவித்ததாவது:
எனக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூபாய் 73 ஆயிரம் பணம் செலுத்துமாறு கூறப்பட்டது. தற்போது எனது குடும்ப நிலையை அறிந்து அந்த தொகையை அரசே செலுத்தி, எனக்கு வீடு வழங்கியிரு ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்களுக் கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.