ஜூலை:25
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் விக்டர் மனோகர் தலைமையில் செஞ்சோலை சேகர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை அருகில் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஸ்கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திற்கு அலங்கரித்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ரவீந்திரன்
அஇதிமுக பிரமுகர் சூர்யா செந்தில் கோல்டன் நகர் பகுதி கழகச் செயலாளர் ஹரிஹரன் அம்பேத்கார் இயக்கம் தேவராஜ், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் வழக்கறிஞர் ஆனந்த், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பன்னீர், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.