அரியலூர்,நவ;07
அரியலூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.
1 குழந்தைகள் இல்லங்கள், குழந்தைகள் நலன் (ம) சிறப்புச் சேவைகள் துறையில் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015.
2 முதியோர் இல்லங்கள், சமூக நலத்துறை, மூத்த குடிமக்களுக்கான சட்டம் 2007.
3 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.
4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.
5 போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் (State Mental Health Authority) மன நல பாதுகாப்புச் சட்டம் 2017.
6 பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள், சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம், 2014.
7 மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் (State Mental Health Authority) மன நல பாதுகாப்புச் சட்டம், 2017.
அவ்வாறு பதிவு பெறாமல் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மன வளர்ச்சி குன்றியோர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் ஃ அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
1 குழந்தைகள் இல்லங்கள் https://dsdcpimms.tn.gov.in (அல்லது) அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்.
2 முதியோர் இல்லங்கள் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம்.
3 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர்.
4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
5 போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மைச் செயல் அலுவலர், தமிழ் நாடு மாநில மன நல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
6 பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள் https://tnswp.com (அல்லது) அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலகம்
7 மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php அல்லது முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) / அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்